10ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்து குழந்தை பெற்ற 21 வயது பெண்

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை பலாத்காரம் செய்து குழந்தை பெற்றுக்கொண்ட அத்தை உறவு முறை கொண்ட பெண்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் மனோகர் (15). 10ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனின் பெற்றோர் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். 

மாணவன் அங்குள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறான். இந்நிலையில், மாணவனுக்கு அத்தை உறவு முறையுள்ள 21 வயது பெண் அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். பெற்றோர் இல்லாமல் தனியாக இருக்கும் மனோகர் மீது காம எண்ணம் கொண்ட, அந்த பெண், அவ்வப்போது ஆசை காட்டி, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுவனோடு உடலுறவு கொண்டுள்ளார். 

இந்நிலையில், அந்த பெண் கர்ப்பமானார். கடந்த 8ம் தேதி திருக்கடையூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. மாணவனின் தாத்தாவிடம் கூறி அவனை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். 

இதற்கு மாணவன், தாத்தா மறுப்பு தெரிவித்தார். அப்பெண் தொல்லை தாங்க முடியவில்லை என்பதால், மாணவன் சார்பில் இதுபற்றி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், கடந்த மார்ச் 19ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, என் வீட்டுக்கு அப்பெண் வந்தார். அப்போது அவர் என்னிடம் ஆசை வார்த்தை கூறி, வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துக் கொண்டார். இப்போது அதனால் குழந்தை பிறந்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணும் மாணவன் மீது புகார் கொடுத்துள்ளார். 

இருப்பினும், சிறுவன் மீது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பாலியல் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அந்த பெண்ணின் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார். இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு 10ம் வகுப்பு மாணவன் தான் தந்தை என்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்து குழந்தை பெற்ற 21 வயது பெண் 10ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்து குழந்தை பெற்ற 21 வயது பெண் Reviewed by hot pic on 09:22 Rating: 5

1 comment:

DR Group. Powered by Blogger.