செய்தியாளர்கள் முகத்தில் காறித் துப்பிய விஜயகாந்த் -பரபரப்பு வீடியோ

 விஜயகாந்தின் அடங்காத கோபம்.... அன்று நாய்...நாய்... தூக்கி அடிச்சுருவேன்.. இன்று ...த்தூ.....

DMDK leader Vijayakanth slammed Chennai reportes as very low degree level.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், "பத்திரிகைகாரங்களா நீங்க....தூ....... என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை இன்று விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

             இச்சந்திப்பின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த விஜயகாந்த், 
2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முடியாது; இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்க முடியுமா? கேட்கவே மாட்டீங்களே... பயப்படுவீங்க பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ......... (காறி துப்புகிறார்) 
             அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், பிரஸ் மீட் கொடுத்தா கேட்போம் என்கிறார்.. அதற்கும், ஆமா நீங்க கேட்பீங்க... நீங்க போய் கேளுங்க பிரஸ் மீட் கொடுங்கன்னு...கேளுங்க.. ஏன்டா உங்களை உங்களை இவ்வளவு நேர்ம நிக்க வெச்சேனே நீங்க கேளுங்க பார்ப்போம்.. உங்க மொதலாளிக சொன்னா போவீங்க... தைரியமா... இல்லைன்னா அந்த பக்கமே நீங்க போகமாட்டீங்க... இவ்வாறு விஜயகாந்த் கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக விஜயகாந்த் காறி துப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.



செய்தியாளர்களிடம் சாடிய விஜயகாந்த்...
செய்தியாளர்களை கடுமையாக சாடிய விஜயகாந்த்...2016-ல் அதிமுக ஆட்சியை பிடிக்காது: விஜயகாந்த் பேட்டி...http://bit.ly/1mcrPoq
Posted by PuthiyaThalaimurai TV on Sunday, 27 December 2015
செய்தியாளர்கள் முகத்தில் காறித் துப்பிய விஜயகாந்த் -பரபரப்பு வீடியோ செய்தியாளர்கள் முகத்தில் காறித் துப்பிய விஜயகாந்த் -பரபரப்பு வீடியோ Reviewed by hot pic on 04:54 Rating: 5

No comments:

DR Group. Powered by Blogger.