கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பியபோது 6-வது மாடியில் இருந்து விழுந்து நடிகர் மரணம்
கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றபோது, 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து நடிகர் பால பிரசாந்த் மரணமடைந்தார். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (வயது25). இவர் ஐதராபாத்தில் தங்கி இருந்து குறும் படங்களில் நடித்து வந்தார். இவர், 'இப்பட்லோ ராமுடிலா சீத்தலா எவர் உண்டா பாபு' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயனாக அறிமுகமாகி நடித்து வந்தார். படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது. அடுத்த மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது.
பால பிரசாந்துக்கும் ஹுக்கட் பள்ளி பவர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6-வது மாடியில் வசிக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவர் இல்லாத நேரத்தில் அந்த பெண் பால பிரசாந்தை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர் அதே குடியிருப்பில் வசிக்கும் தனது நண்பரை வைத்து உளவு பார்க்க ஏற்பாடு செய்திருந்தாராம்.
நேற்று அந்த பெண்ணின் கணவர் வெளியூர் சென்ற போது பால பிரசாந்த் அந்த பெண் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை உளவு பார்த்த நண்பர் அந்த பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் தனது உறவினர்களை வீட்டுக்கு அனுப்பினார். உறவினர்கள் சென்று வீட்டின் கதவைத் தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைக்க முயன்றனர். உடனே அந்த பெண் காதலன் பால பிரசாந்தை கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைத்து கதவை திறந்தார். அதோடு என் மீது சந்தேகம் கொள்கிறீர்களா? என ஆவேசமாக கூச்சலிட்டு தற்கொலை மிரட்டல் விடுத்து பிளேடால் கைகளை கீறி ரகளை செய்தார்.
கையில் இருந்து ரத்தம் பீறிடவே அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். போகும் போது வீட்டுக் கதவை பூட்டி விட்டுச் சென்று விட்டனர். இதனால் பாலபிரசாந்த் வீட்டுக்குள் மாட்டிக்கொண்டார். தப்பிச் செல்ல வழி தெரியாமல் பால் கனிக்கு வந்த அவர் பைப்பை பிடித்து கீழே இறங்க முயன்றார். அப்போது தவறி விழுந்தார். 6-வது மாடியில் இருந்து விழுந்ததால் அவர் மண்டை உடைந்து மரணம் அடைந்தார்.
Bala Prashant, an upcoming Telugu actor died while attempting a film-style escape from his paramour’s relatives house in Moosapet, Kukatpally.
கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பியபோது 6-வது மாடியில் இருந்து விழுந்து நடிகர் மரணம்
Reviewed by hot pic
on
00:51
Rating:
Reviewed by hot pic
on
00:51
Rating:

No comments: