சம்பளம் முக்கியமில்லை.. இறங்கி வந்த "அங்காடி"
இடையில் சில பிரச்சினைகளால் காணாமல் போய் மீண்டுவந்த கடைத்தெரு நடிகை, சம்பளம் முக்கியமில்லை என்ற முடிவிற்கு தற்போது இறங்கி வந்திருக்கிறாராம். தான் ஏற்று நடித்த அழுத்தமான வேடங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் கடைத்தெரு நடிகை. ஹீரோக்களுக்கு இணையாக படங்களில் கலக்கி வந்த நடிகையின் மீது யார் கண்பட்டதோ அடுத்தடுத்து பிரச்சினைகள் அவருக்கு அடுக்கடுக்காக வர ஆரம்பித்தன. இதன் மூலம் கிளம்பிய வதந்திகளால் நடிகையின் திரை வாழ்க்கை கணிசமாக பாதிப்படைந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு சில படங்களில் நடித்து தற்போது மீண்டு கொண்டிருக்கிறார் நடிகை. தன்மேல் விழுந்த கவர்ச்சி நடிகை என்ற முத்திரையை மாற்ற விரும்பும் நாயகி சமீபத்தில் சங்கத் தேர்தலில் ஓட்டுப் போட வந்தபோது தன்னை வைத்து படம் இயக்கிய முன்னாள் இயக்குனர்களை சந்தித்து வாய்ப்புக் கேட்டிருக்கிறார். மேலும் சம்பளம் முக்கியமல்ல படத்தில் எனது கதாபாத்திரம் அழுத்தமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். இதனால் தற்போது நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களை நடிகைக்காக இயக்குனர்கள் உருவாக்கி வருகிறார்களாம். இது தெரியாமல் கிளாமர் வேடத்தில் நடிகையை நடிக்க வைக்க இயக்குனர்கள் தேடிப் போக அனைவரையும் வாசலோடு திருப்பி அனுப்பி விட்டாராம் நடிகை. நல்ல முடிவுதான்!
சம்பளம் முக்கியமில்லை.. இறங்கி வந்த "அங்காடி"
Reviewed by hot pic
on
00:59
Rating:
Reviewed by hot pic
on
00:59
Rating:

No comments: