இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரியை கத்தியால் தாக்கிய பெண்: சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் (வீடியோ இணைப்பு)
இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை பட்டப்பகலில் கத்தியால் தாக்கிய பெண்ணை, பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெருசலேம் பகுதியில் இருந்து 6 மைல் தொலைவில் இருக்கும் Beitar Illit பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான அந்த பாதுகாப்பு அதிகாரி பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த பாலஸ்தீன பெண் ஒருவரை வழி மறித்து யூதர்களின் முக்கிய நகருக்குள் செல்ல போதுமான ஆவணங்கள் உள்ளனவா என அவரிடம் இந்த அதிகாரி வினவியுள்ளார்.
அவர் அளித்த ஆவணங்களை பரிசோதனை செய்துகொண்டிருந்த அதிகாரியை கண்ணிமைக்கும் நேரத்தில், தமது பைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பாலஸ்தீன பெண்மணி தாக்கியுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட அந்த அதிகாரி உடனடியாக அந்த தாக்குதலை தடுத்து சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான Yishai Kreitenberger என்ற அந்த அதிகாரியை ஜெருசலேமிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட 22 வயதான அந்த பாலஸ்தீன பெண்ணையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பாலஸ்தீன பெண் ஒருவரை சுட்டு வீழ்த்திய சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் உள்ள பாலஸ்தீன கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சம் காரணமாக அங்கு வேலை பார்த்து வந்த பாலஸ்தீன தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.
Palestinian Woman Stabs Security Guard
இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரியை கத்தியால் தாக்கிய பெண்: சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் (வீடியோ இணைப்பு)
Reviewed by hot pic
on
07:18
Rating:
Reviewed by hot pic
on
07:18
Rating:

No comments: