200 சிறுவர்களை சுட்டுக்கொன்ற ஐ.எஸ்: நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

ISIS Killing 200 Children



200 சிறுவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யும் காட்சி இணையதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொலை செய்வதும் அதனை வீடியோ எடுத்து இணையதளங்களில் வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த கொடூர காட்சிகளை பார்த்து ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏமனைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவர் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சிரியாவைச் சேர்ந்த 200 சிறுவர்களை தரையில் வரிசையாக குப்புற படுக்க வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கியால் மிருகத்தனமாக சுட்டுக் கொலை செய்யும் காட்டிச வீடியோவில் உள்ளது.
அந்த வீடியோ 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிரியாவில் உள்ள தக்பா விமானப்படை தளம் அருகே எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
தீவிரவாதிகள் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


200 சிறுவர்களை சுட்டுக்கொன்ற ஐ.எஸ்: நெஞ்சை பதறவைக்கும் வீடியோ 200 சிறுவர்களை சுட்டுக்கொன்ற ஐ.எஸ்: நெஞ்சை பதறவைக்கும் வீடியோ Reviewed by hot pic on 07:05 Rating: 5

No comments:

DR Group. Powered by Blogger.