ஆபாச நடிகைகளுடன் தினமும் உறவு... பிரபல நடிகருக்கு எய்ட்ஸ்
Hollywood actor Charlie Sheen revealed he is HIV positive
பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் தினசர் ஒரு ஆபாசப்பட நடிகையோடு உறவு கொண்டதால் இந்த நோய்க்கு ஆளாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 வயதாகும் ஷீன் வால் ஸ்ட்ரீட், தி த்ரீ மஸ்கட்டீர்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர். 2011-ம் ஆண்டு டூ அன்ட் ஆஃப் மென் படத்தில் நடித்த போது, பல்வேறு புகார்கள் காரணமாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அவரை நீக்கிவிட்டது. அதன்பிறகு வேறு படங்களில் அவர் நடிக்கவில்லை.
கடைசியாக அவர் நடத்தி வந்த டெலிவிஷன் ஷோவும் நிறுத்தப்பட்டு விட்டது. மூன்று முறை திருமணமாகி விவாகரத்தானவர் ஷீன். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பிரபலமானவர்கள் பட்டியலில் உலக புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஒருவரும் உள்ளார் என்று பல பத்திரிகைகளும் இணையதளங்களும் கூறி வந்தன. இந்த நிலையில் சார்லஸ் ஷீன்தான் அவர் என டுடே இணையதளம் செய்தி வெளியிட்டது. அதை அவரே விரைவில் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தது. அதன்படி நேற்று இரவு அளித்த பேட்டியில், "ஆமாம்.. எனக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது. இனியும் இதனை மறைக்க விரும்பவில்லை. அதே நேரம் என்னால் யாருக்கும் எய்ட்ஸ் பாதிக்கவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்," என்றார். அவர் ஒவ்வொரு இரவிலும் பிரபல ஆபாச நடிகைகளுடன் தூங்கியதாக ஹாலிவுட்டில் செய்திகள் வந்ததுண்டு. சார்லி குறைந்தது 5 ஆயிரம் பெண்களுடன் உறவு கொண்டு இருப்பார். அதனால்தான் இந்த நோய் அவரைத் தாக்கியுள்ளது என ஹாலிவுட் சினிமா இணையதளங்கள் கூறியுள்ளன.
ஆபாச நடிகைகளுடன் தினமும் உறவு... பிரபல நடிகருக்கு எய்ட்ஸ்
Reviewed by hot pic
on
04:35
Rating:
Reviewed by hot pic
on
04:35
Rating:

No comments: