டைட்டானிக் ஹீரோயினை நிர்வாணமாக வரைந்தது யார் தெரியுமா?

 \

டைட்டானிக் படத்தில் நாயகி கேட் வின்ஸ்லெட்டை நிர்வாண கோலத்தில் உண்மையில் வரைந்தது இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தான். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான படம் டைட்டானிக். லியோனார்டோ டி கேப்ரியோவும், கேட் வின்ஸ்லெட்டும் காதலர்களாக நடித்த அந்த படம் உலக அளவில் மெகா ஹிட்டானது. பட்டிதொட்டி எல்லாம் ஜேக்(ஹீரோவின் பெயர்), ரோஸ்(ஹீரோயினின் பெயர்) பற்றி தான் பேசினார்கள். ஆளாளுக்கு ஜேக், ரோஸ் கப்பலில் நின்று போஸ் கொடுத்தது போன்று போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்தார்கள், எடுக்கிறார்கள். இந்நிலையில் டைட்டானிக் படம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.



டைட்டானிக் ஹீரோவாக நடிக்க டாம் க்ரூஸ், மேத்யூ மெக்கன்னாகி ஆகியோரும், ஹீரோயினாக நடிக்க கேமரூன் டயஸ், மடோன்னோ ஆகியோரும் அணுகப்பட்டனர்.

படத்தில் வயதான ரோஸாக வந்த க்ளோரியா ஸ்டூவர்ட் டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது உயிர் பிழைத்தவர் ஆவார். டைட்டானிக் விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் அவர் மட்டும் தான் அந்த படத்தில் நடித்தார்.



டைட்டானிக் படக்குழுவில் இருந்து யாரோ சேட்டைக்காரர் அனைவருக்கும் போதைப் பொருளை உணவில் கலந்து கொடுத்துவிட்டார். போதையில் தள்ளாடிய 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தண்ணீரில் மிதந்தபடி எடுத்த காட்சிகளில் நடிக்கையில் வெட்சூட் அணிய கேட் மறுத்துவிட்டார். பின்னர் அவருக்கு நிமோனியா ஏற்பட்டு அவதிப்பட்டார்.



படத்தில் கேட் வின்ஸ்லெட்டை நிர்வாணமாக வரைவது போன்று ஒரு கையை காண்பித்திருப்பார்கள். உண்மையில் அது கேப்ரியோவின் கை இல்லை மாறாக கேமரூனின் கை. கேட்டை நிர்வாணமாக வரைந்தது கேமரூன் தான்.

It was director James Cameron who drew a picture of naked Rose for the movie Titanic.

டைட்டானிக் ஹீரோயினை நிர்வாணமாக வரைந்தது யார் தெரியுமா? டைட்டானிக் ஹீரோயினை நிர்வாணமாக வரைந்தது யார் தெரியுமா? Reviewed by hot pic on 17:44 Rating: 5

No comments:

DR Group. Powered by Blogger.