இந்த நடிகைக்கு தான் எத்தனைவாட்டி காதல் வருது?


Kollywood are gossiping about a leady lady's love interests


                 இந்த நடிகை என்னப்பா சேலையை மாற்றுவது போன்று காதலரை மாற்றுகிறாரே என்று கோலிவுட்காரர்கள் இளம் நடிகை ஒருவரை பற்றி பேசுகிறார்கள். அண்டை மாநிலத்தில் இருந்து கோலிவுட் வந்த அந்த நடிகை வந்த வேகத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தார். பின்னர் வாய்ப் பேச்சு அதிகம் பேசும் அந்த இளம் நடிகரை காதலித்தார். அவர்கள் காதல் முறிந்து போனது. காதல் முறிந்த சோகத்தில் இருந்த நடிகை அழ ரப்பர் பாடி தோள் கொடுத்தார். அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. 
                




              திருமணமாகி குழந்தைகளுக்கு தந்தையான அவரை மணக்க நடிகை திரையுலகை விட்டு விலக முடிவு செய்தார். அந்த காதலும் முறிய நடிகை காதலே வேண்டாம் என்று கூறி மீண்டும் நடிக்க வந்தார். இரண்டாவது சுற்றில் அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. இரண்டாவது முறையாக நடிக்க வந்ததும் அவருக்கும் விளையாட்டுப் பிள்ளை நடிகருக்கும் இடையே காதல் காதல் என்று ஊர், உலகம் எல்லாம் பேசியது. அந்த நடிகர் வீட்டு தோட்டத்தில் பல கிளிகள், அதில் ஒன்று தான் இவர் என்றார்கள். 

            பின்னர் என்னவென்றால் நடிகைக்கும் இளம் இயக்குனர் ஒருவருக்கும் காதல் என்கிறார்கள். அவர் பெயரில் நடிகை வீடு கூட வாங்கியுள்ளாராம். இது என்னடா இந்த நடிகை சேலையை மாற்றுவது போன்று காதலரை மாற்றுகிறார் என்று கோலிவுட்காரர்கள் கிசுகிசுக்கிறார்கள்


இந்த நடிகைக்கு தான் எத்தனைவாட்டி காதல் வருது? இந்த நடிகைக்கு தான் எத்தனைவாட்டி காதல் வருது? Reviewed by hot pic on 09:03 Rating: 5

No comments:

DR Group. Powered by Blogger.